Tuesday, July 29, 2008

என்னம்மா கண்ணு சௌக்கியமா ?

பெனாங் நகரில் பெரியார் படப்பிடிப்பு - அம்பேத்கராக நான் .
இயக்குனர் வசனம் படிக்க நாங்கள் கேட்க .....


எனது நண்பர் நடிகர் சத்யராஜ் அவர்களை நான் சுழர்ட்சங்கம் சார்பில் வானவில் என்ற எங்களது மாநில மாநாடுக்கு பேட்டி கண்டேன் . இது ஒரு அற்புதமான கேள்வி பதில் நிகழ்ச்சியாக அமைந்தது . அவருக்கும் எனக்கும் ஒரு வேற்றுமை இருந்தாலும் எங்கள்ளுக்குள் ஒரு நல்ல நட்பும் உண்டு. அதுதான் ஆன்மிகம் . தலைவா நம்ம அதை பற்றி மட்டும் பேச வேண்டாம் , நானும் மாற மாட்டேன் நீங்களும் மாற மாடீங்க என்று சொல்லுவார். அவரிடம் எனக்கு பிடித்த ஒன்று .....ஓபன் ஆக பேசுவார் . சற்று உணர்ச்சிவசப்படுவார் என்றாலும் மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டார் . ஒரு சில நேரங்களில் அவரது கொள்கை அவரை சில கருத்துக்களை சொல்ல வைத்து விடுகிறது .....அதுவே அவருக்கு பலவீனம் என்று சிலர் சொல்லல்லாம் ....அதை ஒரு பலமாகவும் எடுத்துகொள்ளலாம் . அவரோடு பல படங்களில் நடித்து இருக்கிறேன். ஒரு அற்புதமான யதார்த்தத்தை அவர் நடிப்பில் நாம் பார்க்கலாம். என்றுமே அவர் பந்தா பண்ணதில்லை . எல்லோருடனும் சகஜமாக பழகுவார் . ஒரு முறை காஞ்சீவரம் கோவில் அருகே ஷூட்டிங் நடந்தது . எங்களுடன் ஸ்ரீவித்யா வும் இருந்தார் . அப்பொழுது ஒரு பஸ் நிறைய ஆந்திர மாநிலத்தில் இருந்து பயணிகள் வந்தார்கள் . நாங்கள் இருந்த இடத்தை நோக்கி வந்தார்கள் . அவர்கள் இருவரும் ஹீரோ ஹெரோஇன் ஆக நடித்தவர்கள் , அவர்களின் கைஎழுத்தை வாங்க வருகிறார்கள் என்று நான் சும்மா இருந்தேன் . பார்த்தால் என்னிடம் வந்து படம் எடுத்துக்க வேண்டும் என்று சொல்லி எடுத்துக்கொண்டார்கள்,அவர்கள் இருவரையும் கண்டுக்கொள்ளவே இல்லை .


எனக்கு ஒரு விதமான சங்கோஜம் . சத்யராஜ் சிறுத்து கொண்டே தலைவா டிவி பவர் அது என்றார். அப்பொழுது மர்மதேசம் விடாது கருப்பு என்ற தொடர் தெலுங்கு மற்றும் தமிழில் ஓஹோ என்று ஓடிக்கொண்டு இருந்தது அவருக்கும் தெரியும் . பார்த்துவிட்டு என்னையும் பல முறை பாராட்டி இருக்கிறார் . இவ்வளவு சிம்பிளான ஒரு மனிதரை சந்திப்பது அரிது . ஆண்டவன் அவருக்கு அனைத்து சுகம்களையும் நிரந்தரமாக தர நான் வேண்டிக்கொள்கிறேன் .


அந்த ரோட்டரி நிகழ்ச்சியை யூடுபில் போட்டுஇருக்கிரேன் ......அதில் அவர் மக்கள் திலகம், நடிகர் திலகம் , பாலச்சந்தர் , பாரதிராஜா என்று எல்லோரை பற்றி பேசினார் .
அது மட்டும் இல்லை ......மிமிக்ரி யும் செய்து அசத்தி இருக்கிறார் ..........

http://www.youtube.com/watch?v=--DfNYxClOs

http://www.youtube.com/watch?v=66J6yCRDFLY

3 comments:

Pradeep Pollachi said...

I am a fan of Sathyaraj Mama always.I have been to all his shootings when I was doing my school days in Pollachi.
He knows me as Pradeep S/o Priya Rajkumar Pollachi.

rishi said...

உங்கள் ப்ளாக் நல்லாருக்கு.....
அருட்பேராற்றல் கருணையினால் தாங்களும் தங்கள் குடும்பத்தார் அனைவரும் உடல் நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ் மற்றும் மெய்ஞானம் ஓங்கி நீடூழி வாழ்க வளமுடன்...
அன்புடன்
சகபயணி
ரிஷிரவீந்திரன்

மோகன் காந்தி said...

மனதில் பட்டதை தைரியமாக சொல்கூடியவர் எதார்த்த வாதி நன்றி மோகன்

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.