Saturday, November 1, 2008

அய்யனார் - அறிவளுர்

இதை தமிழிலும் போட வேண்டும் என்ற காரணத்தினால் ....நூறு ஆண்டுகளுக்கு முன் என் தாத்தா ( A.V.Raman) அவரின் சொந்த ஊரை விட்டு வந்தார் . ஏதோ காரணங்களால் அப்பக்கமே திரும்பவில்லை . என் தந்தை (V.P.Raman) கூட அந்த கிராமம் எங்கு இருக்கிறதோ என்று ஒரு சில முறை தேடிவிட்டு முயற்சியை கை விட்டுவிட்டார். தாத்தாவின் கூட பிறந்தவர்கள் (Muthukrishnan,Pattabhi ,Swami ) ரங்கூன் சென்று வ்யாபாரம் தொடங்கினர் . இவரோ இங்கிலாந்து சென்று தனது இன்ஜினியரிங் கல்வியை தொடர்ந்தார் . உறவுகள் இருந்தனவா ? அந்த ஊரில் ? இரண்டாம் உலக போர் முடிந்ததும் அவரின் சகோதரர்களில் ஒருவர் பர்மாவிலிருந்து அகதியாக வந்தார்( A.Swami ). அவர்கள் சந்தித்தது சென்ட்ரல் ஸ்டேஷனில் ...அகதிகளுக்கு உதவ சென்ற என் தாத்தா ...திடீர் என்று தன் சகோதரரை போல் ஒருவரை பார்த்து ....நீ சாமி தானே என்று கேட்க ..... சந்தோஷம் .இருந்தாலும் மயிலாடுதுறை (மாயவரம்) அருகில் உள்ள அவர்களின் சொந்த கிராமத்துக்கு யாரும் செல்ல வில்லை. கிராமத்தின் பெயர் அறிவளுர். ரயில் விபத்து நடந்த அறியளுருடன் குழப்ப வேண்டாம் . ஒரு முறை படப்பிடிப்பில் சொந்த ஊரை பற்றி பேச்சு வரவும் நான் எங்கள் ஊரை தேடிக்கொண்டு இருக்கிறேன் என்று கூறினேன். எங்கள் புகைப்படக்காரர் உடனே கூறினார் .....அது எலந்தங்குடி பின்னால இருக்கு என்று ....கேட்டவுடன் மெய் சிலுர்ததது....சுமார் 1895 க்கு பிறகு இப்பொழுதுதான் சொந்த ஊரை எங்கள் குடும்பம் மீண்டும் தெரிந்து கொண்டது என்று. அடுத்த மாதமே சென்று அம்மண்ணை வணங்கினேன் . எங்கள் குல தெய்வம் அங்குள்ள ஒரு சாஸ்தா - அய்யனார் என்று என் பாட்டி குரியது எனக்கு நினைவில் வந்து அந்த கோவிலையும் தேடி கண்டுபிடித்தேன் . மனம் நேகுழ்ந்தது. இதெல்லாம் நடந்து நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அதே ஊர் அதே குலதெய்வம் என்றுள்ள சில நல்லவர்கள் ஒன்று சேர்ந்து இப்பொழுது அந்த கோவிலுக்கு திருப்பணி செய்ய முன் வந்துள்ளனர் ....ஆகவே தான் இதை நினைவு கொர்ந்தேன். காணமல் போன எங்கள் குடும்பம் மீண்டும் குலதேய்வத்தை வந்தடைந்தது அந்த தெய்வத்தின் அருள் என்று தான் சொல்ல வேண்டும் . அய்யனார் என்ற கடவுளை பற்றி தெரிந்தவர்கள் அவரின் சரித்திரம் , ஸ்தலங்கள் போன்றவை பற்றி ஏதாவது குறிப்புகள் இருந்தால் எனக்கு அனுப்புமாறு கேட்டுகொள்கிறேன்.

14 comments:

Anonymous said...

Hi, Nice blog sir.
You are acting really well !
Keep up the good work !
My wishes.

pudugaithendral said...

ஆஹா,

அருமையா தமிழில் எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

கேட்டதும் கொடுப்பது எங்கள் வலையுலகம் :)

இந்த போஸ்டுக்கு லிங்க் கொடுத்து ஒரு போஸ்ட் போடுறேன். சீக்கிரம் பதில் கிடைக்கும்.

pudugaithendral said...

http://pudugaithendral.blogspot.com/2008/11/blog-post.html

மேலே கொடுத்திருப்பது என் போஸ்டிற்கான லிங்க். பதில் வந்தால் உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்.

புதுகை.அப்துல்லா said...

சார் அய்யனார் பற்றி நானும் அறிவேன்.விரைவில் உங்களை நேரில் சந்தித்து விபரங்கள் சொல்கிறேன்.

ஆயில்யன் said...

மோகன் சார் இன்னிக்குத்தான் உங்க பிளாக் கமெண்ட் பக்கம் எட்டிப்பாக்குறேன்!


அறிவளூர் - நான் பொதுப்பணியில் வேலை பார்த்த கொஞ்சம் காலகட்டத்தில் அதிகம் கடந்து சென்ற ஊர்! மஞ்சளார் மகிமலையாறுகளின் பாசன பரப்பிற்குள் வரும்!

எலந்தகுடி முட்டம் அறிவளூர் என்று வரிசையாக செல்லும் கிராமங்கள்

நினைத்துப்பார்க்கிறேன் சென்ற நாட்களை! :)

துளசி கோபால் said...

வலை உலகில் வந்தமைக்கு வாழ்த்து(க்)கள்.

ரயில் விபத்து நடந்த ஊர் 'அரியலூர்' என்று நினைவு.

இறக்குவானை நிர்ஷன் said...

நானும் தேடிப்பார்க்கிறேன்.

இதைப்பாருங்கள்.
http://www.kamakoti.org/tamil/part1kurall28.htm

SK said...

அய்யா வணக்கம்.

நீங்கள் குறிப்பிடும் அதே சாஸ்தா - அய்யனார் தான் எங்களுக்கும் குல தெய்வம். எங்களுடைய குல தெய்வமும், கும்பகோணம் பக்கத்தில் உள்ள கடிச்சம்பாடி எனப்படும் ஒரு ஊர் தான்.

உங்களுக்கு மேலும் விவரம் தேவை என்றால் நான் என் தந்தையை தொடர்பு கொள்ள சொல்லுகிறேன். உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது எனத்தெரிந்தால் உதவியாக இருக்கும்.

இதை பற்றி அறிய உங்கள் நண்பரே உங்களுக்கு உதவலாம். திரு. எஸ். வீ. சேகர் அவர்களுக்கும் இதே கடிச்சம்பாடி அய்யனார் தான் குலதெய்வம். அவரை தொடர்பு கொண்டால் மேலும் விவரம் அறிய வாய்ப்பு உள்ளது.

உங்களுக்கு என் தந்தையின் உதவி தேவை படின் எனக்கு ஒரு மெயில் அனுப்பவும். என்னுடைய

friends.sk@gmail.com

அன்புடன்
குமார்.

SK said...

எங்களது இந்த கோவிலுக்கும் சமீபத்தில் தான் திருப்பணி நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மோகன் காந்தி said...

குலதெய்வத்திற்க்கு குடமுழுக்கா வெற்றி பெற வாழ்த்துக்கள்

மோகன் காந்தி said...

அய்யனார் பற்றி

அய்யனார் ஒரு நாட்டுப்புறக் காவல் தெய்வம். பழங்காலம் தொட்டே அய்யனார் வழிபாடு தமிழர் இடையே இருந்து வருகிறது. குறிப்பாக மதுரையிலும் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் இது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. அய்யனார் வழிபாட்டைச் சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.
அய்யனார் வழிபாடு பிராமணிய இந்து சமய வழிபாட்டு முறைகளில் இருந்து வேறுபட்டது. குறிப்பாக பிராமணப் பூசாரிகள் அய்யனார் கோவில்களில் பூசைகள், சடங்குகள் செய்வதில்லை.

சிலர் ஐய்யப்பன் தான் அய்யனார் என்றும் கூறுவார்கள்

Mohans Musings said...

many thanks hari.
உதவ வந்தவர்களுக்கும் , செய்திகள் தருவதாக சொன்னவர்களுக்கும் , கொடுத்தவர்களுக்கும் எனது நன்றி . sk உங்கள் தந்தையாரை சந்திக்க / பேச நான் முயற்ச்சிக்கிறேன் . சேகரை பார்த்து பேசுகிறேன் . என்னோடு தொடர்பு கொள்ள எனது மின் முகவரிதான் சிறந்தது . ஆயில்யன் , அப்துல்லா , துளசி கோபால் , மோகன் காந்தி , நிரக்ஷன் மற்றும் தென்றலுக்கு நன்றி . தொடர்ந்து தொடர்பில் இருப்போம் .

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

மோகன் அவர்களே,
நீங்கள் ஒர் எக்ஸ் xlri என்பது இப்போதுதான் தெரிந்தது,உங்கள் பதிவைப் பார்த்த பின்பு.

நிறைய எழுதுங்கள்,உங்கள் அனுபவங்கள் சுவையாக இருக்கும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

எழுத்துப்பிழைகளின்றி எழுத முயன்றால் நன்றாக இருக்கும்;நிறைய காணக்கிடைக்கின்றன.

செல்லி said...

உங்களின் வலை உலக பிரவேசம் கண்டதும் மிக்க மகிழ்ச்சி! தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி!

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.