Thursday, July 24, 2008

சிவாஜி கணேசன் - AVM

ஹாளிவூடில் ஹிட்ச்காக் அலுவலகம் ......



எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத பெருமை நமது அய்யாவிற்கு உண்டு . பராசக்தி என்ற அந்த காவியத்தில் முதல் முதலில் திரையில் தோன்றி சரித்திரம் படைத்தார் . முதல் படமே சூப்பர் ஹிட் . முதல் படத்திலேயே கதாநாயகன் . 1950 ல் சுமார் ஜூலை ஆகஸ்டில் ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்து படப்பிடிப்பு தொடங்கி 1952 தீபாவளிக்கு தான் படம் வெளி வந்தது . இரண்டு ஆண்டு போராட்டம் , பல இன்னல்கள், பூசல்களை தாண்டி வந்து தமிழ் திரையின் தலை எழுத்தையே மாற்றி அமைத்தது அந்த படம் . ஏன் ....அரசியல் தலை எழுத்தையே மாற்றி அமைத்தது என்றால் மிகை ஆகாது . அந்த இரண்டு ஆண்டுகளில் அவர் பட்ட சோதனைகளை பற்றி அவரே அவரது சுய சரிதத்தில் எழுதி இருக்கிறார் .
பராசக்தி வெளி வந்த 50 வது ஆண்டு அந்த படத்தின் இணை தயாரிப்பாளர்களான AVM நிறுவனம் ஒரு அற்புதமான சாதனையய் செய்தது.
இந்த நேரத்தில் நாம் தயாரிப்பாளர் பீ .எ.பெருமாளை பற்றியும் நினைவு கூற வேண்டும் . அந்த இளம் நடிகரை கண்டு பிடித்து அவரை கொண்டுதான் படம் எடுப்பேன் என்று விடாபிடியாய் நின்றவர் அவர் . சிவாஜியும் அவரின் குடும்பமும் என்றுமே தெய்வமாய் நினைப்பதும் அவரைதான் .
இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு ....எவ்வளவு செண்டிமெண்ட் பார்பவர்களாக இருந்தால் முதல் வசனம் பேசும் அந்த நடிகரை சக்செஸ் என்று சொல்ல வெய்த்து இருப்பார்கள் .
அவர் அந்த வசனத்தை பேசிய அதே இடத்தில் அந்த மாபெரும் நடிக மேதைக்கு ஒரு நினைவுச்சின்னம் எழுப்பினார்கள் .
இல்லை , இல்லை அது நடிப்பு பிறந்த இடத்தை குறிக்கும் ஒரு சின்னம் .

உலகத்தில் எந்த ஒரு நடிகனுக்கும் அவரை அறிமுகம் செய்த எந்த ஒரு ஸ்டூடியோவும் செய்யாத ஒரு மரியாதையே செய்தார்கள் . நான் யூடுபில் போட்ட சிவாஜி அவர்களின் உரையை கேட்டுப்பார்த்தால் அந்த நிறுவனத்தின் மீது அவர் வெய்த்து இருந்த மரியாதையை பார்த்து இருப்பீர் .


இப்படி உலகத்தின் முதல் முறை சாதனை ஒன்று நடந்த அன்று திரு கமல்ஹாசன் மற்றும் ஆ வீ எம் மற்றும் சிவாஜி குடும்பத்தை தவிர நானும் இருந்தேன் என்பதை ஒரு மிகப்பெரிய கௌரவமாய் கருதிகிறேன். ஏன் என்று கேட்டிர்களானால் திரு சரவணன் அவர்கள் இப்படி ஒரு நினைவு சின்னம் செய்யவேண்டும் என்ற பொது அவருடன் அந்த சின்னம் அமைப்பு மற்றும் அதில் வரும் எழுத்துக்கள் போன்ற விவரங்களில் சற்று உதவியாய் இருந்த காரணம் தான் .


நான் ஹாலிவூட் சென்ற போது யூனிவேர்சல் ஸ்டூடியோ பொய் பார்த்தேன். அங்கு கூட ஹிட்ச்காக் பயன் படுத்திய ரூமின் வெளியே அவரது கார்ட்டூன் ஒன்றை போட்டு இருக்கிறார்கள் . அந்த அறையை யாரோ ஒருவர் இன்று பயன் படுத்திகொண்டு இருக்கிறார்கள் .


நமது தமிழகத்தில் , நமது சென்னையில் இப்படி சரித்திரம் படைக்கும் ஒரு இடம் இருப்பது உங்களுக்கு தெறியுமா ?
இடத்தை ஒதிக்கி இதனை செய்த ஏ வீ எம் நிறுவனத்துக்கு நடிகர் திலகத்தின் ரசிகர்கள் சார்பில் ஒரு பெரிய நன்றி ........





3 comments:

ஜோ/Joe said...

AVM -க்கு நன்றி சொல்வதில் நடிகர் திலகத்தின் ரசிகன் என்ற முறையில் நானும் இணைந்து கொள்கிறேன் .

தகவல்களுக்கு மிக்க நன்றி மோகன்ராம் சார்!

Uma said...

Mr.Mohan,
Your is blog is a nice effort.Get to know lot of significant info about film personalities.
KEEP UP THE GOOD WORK

Unknown said...

Joe and Uma Kumar, thank you very much...I was really topuched by this comment from some friends of Nadigar Thilakam....sent to me through Mr.Ramkumar, Nadigar Thilakam's son.
Dear Mohan: Thank you for your worthy efforts. I am sure you remember me and my wife Kasthuri. We both enjoyed your 'musings'. We both had the opportunity of knowing Uncle Sivaji and his entire family. My wife is a daughter of Kalaivaanar N.S.Krishnan and had known him and his family from her childhood. Everytime he visited California, he graced us by staying with us at least for a day or two. I had the privilege of addressing him as 'Mama'.
I am one of millions of teenagers who grew up watching him on screen. His movies had a lasting impressin on us and shaped our perception of good and evil. I consider it a god-given 'varaprasadam' to have known him personally. Sivaji the legendary actor is well known the world over. But I had the privilege of knowing Sivaji the loving and caring 'mahathma'. Everything we do to make his memory eternal is a service we do to our posterity. Our thanks to you and A.V.M. Studios in these efforts. But everytime my wife and I think of 'Mama', we also think of 'Athai' (KAMALA AMMA), who adoringly took care of this great man till his last breath. They indeed are a great pair. Continue your worthy service and let us know if we can be of any assistance. - Navaneetha Krishnan & Kasthuri Krishnan, Los Angeles,
California.

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.